Operating Theatre for Chavakachcheri Base Hospital – Global Meeting

A Global Meeting is scheduled to discuss the need for an Operating Theatre at Chavakachcheri Base Hospital. An Operation Theatre at Chavakachcheri Hospital can reduce the number of patients and alleviate some of the workload at Jaffna Hospital as well. Issues in Teaching hospital Jaffna are overcrowding and floor patients (due to lack of beds). Teaching hospital Jaffna as a tertiary care facility for the entire northern province can focus on more complex surgeries (cardiac, neuro, vascular and cancer surgeries) and undergraduate and postgraduate teaching and training.

தென்மராட்சி வாழ் அன்பு உள்ளங்களே! 28/03/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 (UK) மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – சத்திரசிகிச்சைக் கூடம் ஆரம்பிப்பது தொடர்பாக ஒரு கலந்துரையாடலை எமது தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் (ஐ.இ) ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் தாயக, புலம்பெயர்வாழ் தென்மராட்சி மக்கள், ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், துறைசார் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.  இந்த திட்டம் நிறைவேறினால் தற்போது அவசர சத்திர சிகிச்சைகளுக்காகவோ, உடனடி விபத்து அவசரநிலை சிகிச்சைகள் போன்ற பல்வேறு அவசர தேவைகளுக்கு சிரமங்கள் மத்தியில் பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலைமை தவிர்க்கப்பட்டு உயிர்களும் காக்கப்படும். இதன்காரணமாக பல்லாயிரகணக்கான தென்மராட்சி பிரதேசவாழ்  மக்கள் மட்டுமின்றி சூழ வாழும் மக்களும் பயனடைவார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.   இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற புலம்பெயர் வாழ் தென்மராட்சி மக்கள் எல்லோரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். ஆகவே இந்த திட்டம் பற்றி தெனமராட்சி பிரதேச மக்கள் ,உறவினர் ,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுதி இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். இந்த திட்டமானது முளுமை அடைந்து தென்மராட்சி பிரதேச மக்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமயும் என்பதில் அய்யம் இல்லை. 

Date: Sunday, 28th of March 2021  Time: 3:30pm London (Europe: 4:30pm, SL: 8:00pm, Canada: 10:30am) 

Zoom ID: https://us02web.zoom.us/j/9170245903 

Meeting ID: 917 024 5903 (No password needed)