சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்கூடம் – செயற்திட்டம்

For English Version – Click HERE

திட்டத்தின் நோக்கம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள அவசர சத்திர சிகிச்சை பிரிவை ஆரம்பிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் ஆகும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்குள் அவசர சத்திர சிகிச்சை பிரிவை ஆரம்பிப்பிதன் மூலம் மருத்துவமனையில் தற்போது வழங்கப்படும் சேவைகளுடன் இதனையும் ஒன்றிணைக்க முடியும்.

இலங்கை மற்றும் இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் உலகின் பல பகுதிகளிலும் கிளைகளை நிறுவிய தொண்டு நிறுவனமான தென்மராட்சி அபிவிருத்தி கழகம் (வுனுயு), உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி திரட்டும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. நிதி திரட்டும் செயற்பாடு மிகவும் திறந்த மற்றும் வெளிப்படைதன்மையுள்ளதாக இருப்பதோடு திட்டத்தை செயற்படுத்துவதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படும்.

TDA ன் உலகளாவிய கிளைகள் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை அணுகுவதோடு, இதே போன்ற திட்டங்களுக்கு நிதியளிக்கும் உலகளாவிய அமைப்புகளுடனும் நிதி சேகரிப்பதற்கான சாத்தியங்களையும் ஆராயும். நிதி திரட்டும் நடவடிக்கை TDAன் உலகளாவிய சுகாதாரக் குழுவால் முன்னெடுக்கப்படும். நிதி சேகரிப்பு பற்றிய விபரங்கள் மருத்துவமனையின் வைத்திய அத்தியட்சகர,; வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் TDAன் சர்வதேச குழுவினருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை குழு உபகரணங்கள் கிடைத்தவுடன் சத்திர சிகிச்சை பிரிவை ஆரம்பிப்பதற்கான பணியை முன்னெடுப்பார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வரலாறு

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தென்மராட்சி பிரதேச மக்களுக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையானது 1932 முதல் சேவை செய்து வருகிறது. இந்த வைத்தியசாலையின் மூலம் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வடமராட்சியின் எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் பூநகரி பிரதேசத்தை சேர்ந்த மக்கள் ஆகியோர் சேவைகளைப் பெற்று வருகிறார்கள். பளை முதல் பூநகரி, நாவற்குழி ஆகிய பிரதேசஙகளுக்கு இடையில்; வசிக்கும் 100,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு (250 சதுர கி.மீ பரப்பளவு, 92 கி.மீ தூரம்) பிரதான வைத்தியசாலையாக விளங்குகிறது. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் சுமார் 300,000 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், வெளி நோயாளர் பிரிவானது (OPD) பொதுமருத்துவம், குழந்தை மருத்துவம், அறுவைச் சிகிச்சை மற்றும் மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் ஆகிய நான்கு சிறப்பு சேவைகளை கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை சி.கே.டி பகுப்பாய்வு பிரிவு, மனநல பிரிவு, மது மறுவாழ்வு பிரிவு, நட்பு நிலையம், உடற்பயிற்சி சிகிச்சை பிரிவு மற்றும் பொது கிளினிக் வசதிகளை கொண்டுள்ளது. மேலும், வைத்தியசாலை ஆய்வுகூட, கதிரியக்க மற்றும் சட்ட மருத்துவ சேவைகளை வழங்குகிறது..

இந்த வைத்தியசாலையில் தற்பொழுது மொத்தம் 200 படுக்கைகள் உள்ளன, 60 – 70 வீதமானவை பாவனையில் உள்ளன. இந்த வைத்தியசாலையில் 29 சிறப்பு வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள், 49 தாதியர்கள், மற்றும் 105 உதவிப் பணியாளர்கள் அனைவரும் முழுநேர அடிப்படையில் சேவை செய்கிறார்கள். தற்பொழுது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் இல்லை. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரும் அவசர நேயாளர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சை வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுகின்றார்கள். இவ்வாறான தேவைகளுடைய மக்கள் சாவகச்சேரி வைத்தியசாலையை தவிர்த்து, தங்கள் ஊரிலிருந்து பல மைல் தொலைவில் இருக்கும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைகளை நாடி நேரடியாகச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு

1990 களின் பிற்பகுதியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முழுமையான செயற்பாட்டுடன் கூடிய சத்திர சிகிச்சை பிரிவு இருந்தது. இது 2002 ல் நடந்த உள்நாட்டுப் போரின் பொழுது முற்றிலுமாக அழிக்கப்பட்டது. கீழேயுள்ள படம் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையின் ஒரு பகுதியை காட்டுகின்றது. பிரதான வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு போருக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டாலும், சத்திர சிகிச்சை பிரிவு இயங்க வில்லை. தற்போது, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் வடக்கு நோக்கி 15 மைல் தொலைவில் இருக்கும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார்கள். 

சத்திர சிகிச்சை பிரிவை மீள ; நிர்மாணிக்கும் திட்டம் உலக வங்கி நிதியுதவி ஆதரவுடன் 2015 இல் தொடங்கப்பட்டது. மருத்துவமனை மைதானத்திற்குள் ஒரு தனி கட்டிடத்தில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை பிரிவை நிறுவ திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கீழ் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவையும், முதல் தளத்தில் சத்திர சிகிச்சை பிரிவையும் அமைக்கும் நோக்கத்துடன் புதிய இரண்டு மாடி தொகுதி கட்டப்பட்டது. இரண்டு மாடி கட்டிடத்தின் படம் கீழே காட்டப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட போதிலும், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையினால் சத்திர சிகிச்சை பிரிவை இயக்குவதற்கு தேவையான முக்கியமான உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், திட்டம் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.

Benefits to the Community

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒரு சத்திர சிகிச்சை பிரிவு இருப்பது அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் 100,000 தென்மராட்சி மக்களின் இன்றியமையாத தேவை ஆகும். . பொதுவானதும் சிறியதுமான சத்திர சிகிச்சைகள், காயங்களுக்கான சிகிச்சைகள் மற்றும் மகப்பேறியல் தொடர்பான சிகிச்சைகள் போன்ற சேவைகளை மக்களின் இடத்திலேயே வழங்குவதன் மூலம் சிக்கல்களைக் குறைப்பதோடு நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க முடியும். சிகிச்சையில் தாமதம் ஏற்படுவதால் உண்டாகும் மரணங்கள் மற்றும் நீண்டகால நோய்களை ஒரு சத்திர சிகிச்சை பிரிவை இயங்க வைப்பதன் மூலம் தடுக்க முடியும்..

இலங்கையின் தெற்குப் பகுதியுடன் வடக்கை இணைக்கும் பிரதான யு9 நெடுஞ்சாலையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த பிரதான பாதையின் ஊடாக வாகனங்கள் இரு திசைகளிலும் மிகவும் அதிகமான வேகத்தில் பயணிக்கின்றன. யு9 சாலையில் கூடுதலான விபத்துக்கள் நிகழ்கின்றன என்பதை சமீபத்திய தகவல்கள் சுட்டி காட்டுகின்றன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையானது யு9 வீதியின் ஊடாக 80 முஅ பிரதேசத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும். விரைவான, உயிர் காக்கும் சிகிச்சைகள் மூலம் காயமடைந்த நோயாளிகளுக்கு உடனடியாக சேவையை வழங்கி உயிர்களைக் காப்பாற்ற முடியும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவை இயக்குவதன் மூலம் குறைந்த செலவில் விரைவானதும் சௌகரியமானதுமான விபத்து மற்றும் காயத்துக்கான சிகிச்சை பிரிவை மக்களுக்கு வழங்க முடியும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வசதிகள் இல்லாததால் சத்திர சிகிச்சைக்காக நோயாளிகள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார்கள். இது எப்பொழுதும் சாத்தியமாக இருப்பதில்லை. மருத்துவமனையில் அம்புலன்ஸ் கிடைப்பது, யாழ்ப்பாண மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்கான அனுமதி கிடைப்பது மற்றும் தீவிர நோயாளர்களுக்கான முன்னுரிமை சிகிச்சை என்பன நோயாளர்களுக்கு எவ்வளவு விரைவாக சிகிச்சை வழங்க முடியும் என்பதை தீர்மானிக்கின்றது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையாக இருப்பதால் நோயாளிகள் அதிக அளவில் அங்கு வருவதன் காரணமாக சிகிச்சை தாமதமாகும் சாத்தியக் கூறுகள் அதிகம். மேலும் வீட்டுக்கு நெருக்கமாக வைத்தியசாலை அமைவதால் நோயாளர்களும் அவர்களின் குடும்பமும் பல நன்மைகளை (நேரத்தையும், பணத்தையும் சேமித்தல் மற்றும் குடும்ப ஆதரவு போன்றவை) பெற்று கொள்ள முடியும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு இயங்குவதன் மூலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையை குறைத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை குறைக்க முடியும். அதிக நோயாளிகளின் வருகையால் யாழ் போதனா வைத்தியசாலை பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவதுடன் அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கைகள் வழங்க முடிவதில்லை. யாழ் போதனா வைத்தியசாலையானது முழு வடக்கு மாகாணத்திற்கும் மூன்றாம் நிலை பராமரிப்பு சிகிச்சையான மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் (இருதய, நரம்பியல், நாளம் சார்ந்த மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள்) மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை கற்பித்தல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும்.

தேவையான உபகரணங்கள் மற்றும் கணிக்கப்பட்ட செலவுகள் – நிதி திரட்டும் இலக்கு

வடக்கு சுகாதாரத் துறையின் மருத்துவ நிபுணர்களுடன் வுனுயு கலந்தாலோசித்து அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட உபகரணங்களின் அண்ணளவான ஒட்டுமொத்த செலவு கீழே மதிப்பிட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தின் நாணய பரிமாற்ற வீதத்தை கணிசமான பெறுமதி மாற்றம் கொண்டிராத இருந்த பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டொலர்களில் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத கணிக்கப்படாத செலவுகள் மற்றும் நாணய பரிவர்த்தனையில் உள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, வுனுயு மற்றும் மருத்துவமனை நிர்வாகம் 14 மில்லியன் இலங்கை ரூபாயினை தங்கள் இலக்கு தொகையாக நிர்ணயித்து உள்ளது. ஒரு பிரிட்டிஷ் பவுண்டு 255 இலங்கை ரூபா விகிதத்திலும், மற்றும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 180 இலங்கை ரூபா விகிதத்திலும் கணிக்கப்பட்ட இலக்கு தொகையானது 55,000 British Pounds அல்லது US$ 78,000 ஆகும்.

திட்ட வரைபு மற்றும் நெறியாள்கை

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயற்படுத்தப்படவுள்ளது – நிதி திரட்டும் செயற்பாடு மற்றும் செயற்படுத்தும் செயற்பாடு என்பனவாகும். தென்மராட்சி அபிவிருத்தி கழகம் (வுனுயு) நிதி திரட்டும் செயற்பாட்டினை செய்வதோடு, உபகரணங்களைப் பெற்றுக் கொண்டவுடன் சத்திர சிகிச்சை மற்றும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை இயக்குவதற்கான பணியை மருத்துவமனையின் நிர்வாகம் பொறுப்புடன் நிறைவேற்றும்.

Governance During Fundraising

About Thenmaradchi Development Association

தென்மராட்சி அபிவிருத்தி கழகமானது (வுனுயு), அரசியல் மற்றும் இன சார்பற்ற, இலாப நோக்கற்ற அமைப்பாகும்.இந்த அமைப்பானது தென்மராட்சி மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் தொழிற்துறை மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்டு 2005 முதல் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது. வுனுயு (இலங்கை) இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும் – (பதிவு எண்: TN/SS/TDAC/2019/01), மற்றும் யாப்புக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மூலம் இயக்கப்படுகின்றது. தற்போது வுனுயு (இலங்கை)யின் தலைவராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும், செயலாளராக உள்ளுராட்சி மன்றங்களின் முன்னைநாள் செயலாளராக பணியாற்றிய திரு ந.பாலச்சந்திரன் அவர்களும்; தலைமை தாங்குகின்றனர்.

TDA (UK) இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும் – (பதிவு எண்: 1115337). இது தென்மராட்சி மக்களின் கல்வி, சமூக-பொருளாதார, சுகாதார மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவும் நோக்கத்துடன் 2006 இல் உருவாக்கப்பட்டது. கனடா, அவுஸ்ரேலியா, நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளில் தனிப்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் வாழும் மக்களின் ஆதரவுடனும் பங்களிப்புடனும் கல்வி, விளையாட்டு, மருத்துவ வசதிகள் மற்றும் சிறு தொழில்களை மேம்படுத்துவதற்காக வுனுயு பல திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது. பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கை ரூபாய் 55 லட்சத்திற்கும் அதிகமான தொகைப் பங்களிப்பை வழங்கிய புலம்பெயர் சமூகத்தின் உலகளாவிய வலையமைப்பை வுனுயு கொண்டுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்ட TDA சர்வதேச குழு (Global TDA) இந்த முயற்சியை சாவகச்சேரி வைத்தியசாலை மேலாண்மை குழுவினரின்; ஒருங்கமைப்புடன் செயற்படுத்தும்.

VISIT TDA UK Website for more info about TDA and the Projects done over the years: https://thenmaradchi.org/

TDA Global Contacts

Donation to the Project:

a. Directly through Money Giving Charity Link

virginmoneygiving.com/fund/Chavahospitaloperatingtheatre

b. Donate to Sri Lanka Bank

Bank: People’s Bank Chavakachcheri, Sri Lanka (SWIFT Code (BIC) – PSBKLKLX023)
AC Name: Thenmaradchy Development Association.
AC No: 110-2-002-5-0063948

TDA, Hospital Management and the Thenmaradchi People are looking for your support to establish the Operating Theatre at Chavakachcheri Base Hospital

Thank You